ராஜாசாப் புதிய வெளியீட்டுத் தேதி!

dinamani2F2025 08 282F4iwtv47t2FCapture
Spread the love

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவான தி ராஜாசாப் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றவர் நடிகர் பிரபாஸ். கே.ஜி.எஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்தார்.

சலார் படம் கடந்தாண்டு வெளியாகி ரூ.700 கோடிக்கும் மேல் வசூலித்தது. தொடர்ந்து வெளியான கல்கி ஏடி 2989 ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூலித்து அசத்தியது.

தற்போது, பீபுள் மீடியா பேக்டரி தயாரிப்பில் இயக்குநர் மாருதி இயக்கத்தில் தி ராஜாசாப் படத்தில் பிரபாஸ் நடித்து முடித்துள்ளார். ஃபேண்டசி கலந்த ஹாரர் கதையாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த திரைப்படத்தின் பணிகள் முடிவடையாத காரணங்களால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு வருகிற டிச. 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், ராஜாசாப் படத்தை அடுத்தாண்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியிட உள்ளதாக மீண்டும் வெளியீட்டுத் தேதியை தயாரிப்பு நிறுவனம் மாற்றியுள்ளது.

இதையும் படிக்க: காந்தி கண்ணாடி டிரைலர்!

the rajasaab new release date announced

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *