ராஜ்நாத் சிங்குடன் கனிமொழி சந்திப்பு: தமிழக மீனவர்களை மீட்க கோரிக்கை | Kanimozhi meeting with Rajnath Singh

1341328.jpg
Spread the love

சென்னை: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, தமிழக மீனவர்களை மீட்டுத் தரும்படி கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமாழி நேற்று சந்தித்து மனு அளித்தார்.

அந்த மனுவில், ‘‘கடலோர காவல்படையால் லட்சத்தீவுகள் அருகில் கைது செய்யபப்பட்ட தூத்துக்குடி தருவை குளத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள், அவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டும்.

குஜராத் போர்ப்பந்தர் அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, கடலில் தவறி விழுந்த தூத்துக்குடி, அயன்பொம்மையாபுரத்தைச் சேர்ந்த மீனவர் அண்ணாதுரையை தேடும் பணியை துரிதப்படுத்தி அவரை கண்டுபிடித்து தரவேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *