ராஜ் கெளதமன் மறைவு: இரா. முத்தரசன் இரங்கல்

Dinamani2f2024 11 132fy907ivck2f300px E0aeb0e0aebee0ae9ce0af8de0ae95e0af8ce0a.jpeg
Spread the love

எழுத்தாளர் ராஜ் கெளதமனின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் எழுத்தாளர், பேராசிரியர் ராஜ் கெளதமன் (வயது 74) உடல் நலன் குன்றி இருந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் உயிரிழந்தார்.

இதையும் படிக்க : எழுத்தாளர் ராஜ் கௌதமன் காலமானார்!

இந்த நிலையில், அவரின் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

”தமிழ்நாட்டின் தலைசிறந்த பண்பாட்டு ஆய்வாளர் ராஜ் கௌதமன் (74) இன்று (13.11.2024) காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு வருந்துகிறோம்.

கடந்த 1990 ஆண்டுகளில் அடித்தட்டு மக்கள் எழுச்சி கொண்டு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கிய காலத்தில் சமூக, பண்பாட்டு ஆய்வில் ஈடுபட்ட ராஜ் கௌதமன், அயோத்தி தாசர் ஆய்வு, தொல்காப்பியம் உள்ளிட்ட இலக்கிய தளம் சார்ந்த ஆய்வு படைப்புகள், ஆரம்ப கட்ட முதலாளித்துவமும், தமிழ் சமூக உருவாக்கமும், பின் நவீனத்துவம் என ஏராளமான படைப்புகளை வழங்கியுள்ளார். சமூக நீதி சார்ந்த ஜனநாயக சக்திகள் முனைப்புடன் செயல்பட வேண்டிய நேரத்தில் ஆய்வாளர் ராஜ் கௌதமன் மறைவு பேரிழிப்பாகும்.

அன்னாரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது வாழ்விணையர் மற்றும் மகளுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *