ராணா, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்பட 25 பேர் மீது வழக்குப்பதிவு! என்ன காரணம்?

Dinamani2f2025 03 202fj539wj082fcapture.jpg
Spread the love

நடிகர்கள் ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்பட 25 பிரபலங்கள் மீது தொழிலதிபர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தெலங்கானாவின் மியாபூர் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் பி எம் பனீந்த்ரா சர்மா சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய பிரபலங்கள் மீது புகாரளித்துள்ளார்.

அந்தப் புகாரில் சமூக வலைதள பிரபலங்கள், நடிகர்கள் ஆகியோர் சட்டவிரோத சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்துவதாகவும் அதற்கு ஈடாக பெரும் தொகையை இவர்கள் கமிஷனாக பெறுவதாகவும் அவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

இதுதொடர்பாக நடிகர்கள் ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய்தேவரகொண்டா, ப்ரணிதா, லட்சுமி மஞ்சு, நித்தி அகர்வால் மற்றும் சமூக வலைதளப் பிரபலங்கள் 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையும் படிக்க | சஹால் – தனஸ்ரீக்கு விவாகரத்து வழங்கி மும்பை நீதிமன்றம் தீர்ப்பு!

மேலும், இந்த செயலிகள் குறைந்த நேரத்தில் அதிக பணம் கிடைக்குமென்று முதலீடு செய்பவர்களை ஊக்குவித்து இறுதியில் அவர்களை சூதாட்டத்திற்கு அடிமையாக்குகின்றன.

இதற்கான செயலிகள் ஆப் ஸ்டோர்களில் எளிதில் கிடைக்காது என்றாலும், சமூக வலைதள விளம்பரங்கள் மூலம் தங்களுக்குத் தேவையான பார்வையாளர்களை இலக்கு வைக்கின்றன.

ஆன்லைன் விளம்பரங்களின் பரவலான தன்மையால் இவை பயனர்களுக்கு எளிதாகக் கிடைப்பது இந்தச் சிக்கலை மேலும் அதிகரிக்கிறது. இத்தகைய சூதாட்ட செயலிகளில் பல கோடி ரூபாய் புழக்கத்தில் உள்ளது என அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில், தெலுங்கானா கேமிங் சட்டத்தின் பிரிவுகள் 3, 3(ஏ), மற்றும் 4; பிஎன்எஸ் இன் பிரிவு 49 உடன், பிரிவு 318(4) மற்றும் 112; ஐடி சட்டத்தின் பிரிவு 66-டி ஆகியவற்றின் கீழ் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *