சிவகார்த்திகேயன் தனது 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்திருக்கிறார். அமரன் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் மேஜர் முந்த் வரதராஜனின் உண்மை சம்பவத்தின் தழுவலாக உருவாகியுள்ளது.
படத்தின் பாடல்கள், ராணுவப் பின்னணி என ரசிகர்களைக் கவர்ந்துள்ளதால் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிக்க: டாக்ஸிக் படத்தை தேர்வு செய்தது ஏன்? நடிகர் யஷ் விளக்கம்!
இப்படத்தின் டிரைலரை சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்தப் படத்தில் நாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.
பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்கள், சாய் பல்லவியுடான காதல் காட்சிகள் என டிரைலர் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.
இதையும் படிக்க: 55-ஆவது இந்திய திரைப்பட விழா: 25 படங்களில் ஒரேயொரு தமிழ்ப்படம்!
இந்நிலையில் படத்தின் சிறப்புக் காட்சி தில்லியில் உள்ள இந்திய ராணுவத்துக்கு திரையிடப்பட்டது. அவர்களிடமிருந்து மிகுந்த பாராட்டுகளைப் பெற்றதாக கூறப்படுகிறது.
இந்தத் திரையிடலில் சாய் பல்லவி, சிவகார்த்திகேயன் பங்கேற்றார்கள்.
தீபாவளிக்கு இந்தப்படம் பெரிய வெற்றியைப் பெறுமென் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.