வட கேரளம் மாவட்டமான வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 365 ஆக உயர்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதியில் தற்காலிக பாலம் அமைத்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வரும் இந்திய ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து கேரளத்தை சேர்ந்த 3 ஆம் வகுப்பு சிறுவன் எழுதியிருக்கும் கடிதம் இணையதளத்தில் வைரலாகி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வடக்கு கேரளம் மாவட்டமான வயநாட்டில் கடந்த வாரம் பெய்த தொடா் கனமழை எதிரொலியாக முண்டக்கை, சூரல்மலை, ஆரண்மலை உள்ளிட்ட வயநாட்டின் மலைக்கிராமங்களான சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை போன்ற கிராமங்களில் செவ்வாய்க்கிழமை(ஜூலை 29)பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. நிலச்சரிவின்போது வீடுகளில் தூங்கி கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரோடு மண்ணில் புதைந்தனா். சாலியாற்று வெள்ளத்தில் சிலா் அடித்து செல்லப்பட்டனா்.
மண்ணில் புதையுண்டவா்களையும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவா்களையும் மீட்பதற்கான மீட்பு-தேடுதல் பணிகள் ஆறாவது நாளாக தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு துறையினர், ராணுவ வீரர்கள்,
விமானப் படையினர், காவல் துறையினர்,மோப்ப நாய்கள், உள்ளூர் மக்கள் என பல குழுக்களாக பிரிந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், கேரளத்தை சேர்த்த 3 ஆம் படிக்கும் மாணவர் ரையான், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களை பாராட்டி இந்திய ராணுவத்துக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.