புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் காசிமா (17), அமெரிக்காவில் நடந்த உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்கப்பதக்கங்கள் வென்று சாதனைப் படைத்து தமிழகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தார்.
சமீபத்தில் நடந்த 7வது கேரம் உலகக் கோப்பை போட்டி 2025-ல் குழுப்போட்டியில் தங்கப் பதக்கமும், தனிநபர் பிரிவில் வெண்கல பதக்கமும், இரட்டையர் பிரிவில் வெள்ளி பதக்கமும் வென்று மீண்டும் சாதனை படைத்தார்.

இதுகுறித்து நெகிழ்ச்சியாகப் பேசிய காசிமா, “6 வயது முதல் பயிற்சி எடுத்து வருகிறேன். 7 வயதில் தேசிய அளவிலான போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தேன். எனது அப்பாதான் கோச்சிங் கொடுத்து வருகிறார். தமிழ்நாடு கேரம் சங்க செயலாளர் மரிய இருதயமும் எனக்கு கோச்சிங் கொடுக்கிறார். என் வீட்டின் சுவர், கண்ணாடி என எல்லா இடத்திலும் ‘I’m a world champion one day’ என எழுதி வைத்திருப்பேன்.“ என்றார். தமிழகமே காசிமாவைப் பாராட்டி, கொண்டாடியது.