“ராமதாஸுக்கு ஏதாவது ஆகிவிட்டால், உடன் இருப்பவர்களை தொலைத்து விடுவேன்!” – அன்புமணி ஆவேசம் | Anbumani Ramadoss talks about ramadoss health condition

1379335
Spread the love

சென்னை: “பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றிருக்கும் ராமதாஸை தூங்க விடுவதில்லை. அவருக்கு ஏதாவது ஆகிவிட்டால், உடன் இருப்பவர்களை தொலைத்து விடுவேன்” என பாமக தலைவர் ராமதாஸ் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

சென்னையில் பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடந்தது. அப்போது கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் மத்தியில் பேசிய அன்புமணி ராமதாஸ், “ஐயாவுக்கு 87 வயதை எட்டிவிட்டது என்பதால், சாதாரண பரிசோதனைக்காக மருத்துவமனை சென்று இருக்கிறார். இது திட்டமிட்ட பரிசோதனைதான். ஆனால் ஒரு சிலர் ஐயாவை பார்க்க வரச் சொல்லி அழைத்துள்ளனர். ஐயாவை பாதுகாப்பே இல்லாமல் யார் யாரோ சென்று பார்க்கின்றனர். வீட்டில் இருக்கும்போது ஐயாவின் பாதுகாப்பு கருதி வராண்டாவை தாண்டி யாரையும் அனுமதிக்க மாட்டேன்.

இது என்ன கண்காட்சியா? அவரின் பாதுகாப்பு மிக முக்கியம். அவர் நன்றாக இருக்கிறார். உடன் இருப்பவர்கள் அவரை வைத்து நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். அவருக்கு ஏதாவது ஆகிவிட்டால், உடன் இருப்பவர்களை தொலைத்து விடுவேன். அவர்களை சும்மா விடமாட்டேன். நான் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறேன் என நினைக்கிறார்கள். மனதில் வெறியுடன், கோபத்துடனும் இருக்கிறேன்” என்று ஆவேசமாக அன்புமணி பேசியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *