ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதிலும் இருந்து வந்து செல்கின்றனர். இவர்கள் கோயிலில் உள்ள பல்வேறு சன்னிதிகள் முன் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் காணிக்கையாக பணம், நகைகள் மற்றும் பட்டாடைகளை காணிக்கையாக செலுத்துகின்றனர். இவ்வாறு செலுத்தப்படும் காணிக்கைகள் ஒவ்வொரு மாதமும் கோயில் அம்மன் சன்னிதி அனுப்பு மண்டபத்தில் வைத்து எண்ணப்படும்.
கடந்த மாதத்திற்கான உண்டியல் திறப்பு கடந்த 30-ம் தேதி நடைபெற்றது. கோயிலின் பிரதான உண்டியல்கள் மற்றும் உபகோயில்களின் உண்டியல் திறப்பில் அறநிலையத்துறை அதிகாரிகள், வங்கி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று காணிக்கைகளை எண்ணினர். இதன்படி சுமார் 2 கோடியே 9 லட்சத்து 80 ஆயிரத்து 165 ரூபாய் மற்றும் பலமாற்று பொன் இனங்கள் 85 கிராம், 5 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியன காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
