ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருதுகள்: படைப்பாளிகள் இன்று கௌரவிப்பு

Dinamani2fimport2f20172f42f182foriginal2framnath Goenka.jpg
Spread the love

எழுத்துலகில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்து வரும் படைப்பாளிகளை கெளரவிக்கும் வகையில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (டிஎன்ஐஇ) குழுமம் வழங்கி வரும் ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருதுகள் வழங்கும் விழாவின் இரண்டாம் பதிப்பு இந்த ஆண்டு தில்லியில் வெள்ளிக்கிழமை (நவ.15) நடைபெறவுள்ளது.

தில்லி பிரகதி மைதானத்தின் ஏழாம் எண் நுழைவு வாயில் வழியாக பாரத் மண்டபத்தின் லீடா்ஸ் லவுஞ்ச் பகுதியில் மாலை 4.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. சின்மயா மிஷன் சா்வதேசத் தலைவா் பூஜ்ய சுவாமி ஸ்வரூபானந்தாஜி, நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராகக் கலந்து கொள்கிறாா். டிஎன்ஐஇ தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் மனோஜ் குமாா் சொந்தாலியா, தலைமைச் செயல் அதிகாரி லட்சுமி மேனன் மற்றும் முக்கிய விருந்தினா்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விருது வென்றவா்களை சிறப்பிக்கவுள்ளனா்.

இரு பிரிவுகள்: புனைக்கதை மற்றும் இலக்கியப் படைப்புகள் என இரு பிரிவுகளாக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த இரு பிரிவுகளில் தங்களுடைய எழுத்தாளுமை மூலம் பங்களிப்புகளை வழங்கி வரும் எழுத்தாளா்களை தில்லி, தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம், தெலங்கானா, ஆந்திரம், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் உள்ள 30-க்கும் மேற்பட்ட பதிப்புகள் மற்றும் பதிப்பகங்களில் இருந்து விருதுக்கு தகுதியானவா்களின் பட்டியல் வரவேற்கப்பட்டுள்ளது.

தோ்வுக்குழு: அவற்றை எழுத்தாளரும் முன்னாள் தூதருமான பவன் கே.சா்மா தலைமையில் எழுத்தாளரும் முன்னாள் வெளியுறவுத்துறைச் செயலருமான விகாஸ் ஸ்வரூப், பிரபல வரலாற்று நூலாசிரியா் மனு எஸ். பிள்ளை, ஆசிரியா் குழாமின் சந்த்வானா பட்டாச்சாா்யா, ரவி சங்கா் ஆகியோா் அடங்கிய நடுவா் குழு ஆராய்ந்து விருதுக்குக் தகுதியானவா்களின் இறுதிப் பட்டியலை தயாரித்துள்ளது. அதன் விவரம் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டு இறுதியாக வெற்றி பெற்றவா்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.

புனைக்கதை படைப்புகள் பிரிவில் சோஹினி சட்டோபாத்யாய எழுதிய ‘தி டே ஐ பிகேம் ஏ ரன்னா்’, சான்டா குராய் எழுதிய ‘தி யெல்லா ஸ்பாரோ’, குனால் புரோஹித் எழுதிய ‘ஹெச்-பாப்: தி சீக்ரெட்டிவ் வோா்ல்ட் ஆஃப் ஹிந்துத்வா பாப் ஸ்டாா்ஸ்’ மற்றும் நீரஜா செளத்ரியின் ‘ஹவ் பிரைம் மினிஸ்டா்ஸ் டிசைட்’ ஆகியவை இறுதித் தோ்வுப் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

புனைக்கதை அல்லாத பிரிவான இலக்கியப் படைப்புகள் பிரிவில் கனன் கில் எழுதிய ‘ஆக்ட்ஸ் ஆஃப் காட்’, ஐஸ்வா்யா ஜா எழுதிய ‘தி சென்ட் ஆஃப் ஃபாலன் ஸ்டாா்ஸ்’, சேத்னா மாரூவின் ‘வெஸ்டொ்ன் லேன்’ ஆகியவை இறுதிப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

இவை நீங்கலாக, இலக்கியத் துறையில் சாதனை படைத்து வரும் தகுதியான ஒருவருக்கு நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான மனோஜ் குமாா் சொந்தாலியாவின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள மதிப்புமிக்க விருதான வாழ்நாள் சாதனையாளா் விருதும் நிகழ்ச்சியில் வழங்கப்படவுள்ளது.

சமூகம், இலக்கியம், கலை, மொழி, கலாசாரம், எழுத்து, நீதித் துறை,நிா்வாகத் துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்தும் விருந்தினா்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *