நேற்று காலை அறிவாலயத்தை முற்றுகையிட்டவர்கள், மதியத்துக்கு மேல் கருணாநிதி நினைவிடத்தை முற்றுகையிட்டு கைதாகினர். பின்னர் அண்ணா சாலையில் அமர்ந்து போராடி கைதாகினர். கைது செய்தவர்களை மாலைக்கு மேல் காவல்துறையினர் விடுவித்தனர். சென்ட்ரல் அருகே கூடிய தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கைகள் நிறைவேறாமல் வீட்டுக்கு திரும்பக்கூடாது என தீர்மானித்து, மீண்டும் ரிப்பன் பில்டிங் முன்பு கூட்டமாக அமர்ந்துவிட்டனர்.
இரவு 9:45 மணிக்கு மேல் ரிப்பன் பில்டிங் வெளியே அமர்ந்தவர்கள், ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் போட்டு கொண்டிருந்தனர். “நாங்க யாருக்கு என்ன கெடுதல் செஞ்சோம். பதினைஞ்சு இருபது வருசமா இந்த ஊருக்காக வேலை பார்த்த எங்களை குப்பை மாதிரி தனியார்க்கிட்ட தூக்கி போடுறீங்களே இது நியாயமா? நாங்க எங்க வேலையைத்தானே கேட்குறோம். யாருக்கும் தொந்தரவா செய்யுறோம்? அப்புறம் ஏன் எங்களை திருடனை பிடிக்கிற மாதிரி பிடிக்கிறீங்க? அஞ்சு மாசமா வேலை இல்லாம இருக்குறோம்.