ரிமோட்டை வீசிவிட்டு திமுக கூட்டணியில் இணைந்தது ஏன்? – கமல்ஹாசன் ‘கஷ்டமான’ விளக்கம் | Kamalhaasan about joining dmk alliance

Spread the love

ரிமோட்டை டிவி மீது வீசி​விட்டு திமுக கூட்​ட​ணி​யில் இணைந்​தது ஏன் என மக்​கள் நீதி மய்​யம் கட்​சித் தலை​வர் கமல்​ஹாசன் புது விளக்​கம் ஒன்றை அளித்​துள்​ளார்.

தஞ்​சாவூர் அருகே உள்ள செங்​கிப்​பட்​டியை அடுத்த புதுக்​கரியப்​பட்​டி​யில் கவிஞர் சினேக​னின் முயற்​சி​யால் நம்​மவர் நூல​கம், படிப்​பகம், கலைக்​கூடம் ஆகிய​வற்​றுக்​கான அடிக்​கல் நாட்டு விழா நேற்று நடை​பெற்​றது. இதில் கலந்து கொண்ட மக்​கள் நீதி மய்​யம் கட்​சி​யின் தலை​வ​ரும், எம்​.பி-​யு​மான கமல்​ஹாசன் பேசி​ய​தாவது: அன்பு கட்​சியை தாண்​டியது. அண்​ணா​வின் மேல் எனக்கு இருக்​கும் அன்​பும் அப்​படிப்பட்​டது​தான். அவர்​களிடம் கற்ற பிள்​ளை​கள் அனை​வ​ருக்​கும், அவர்​களிடம் கற்​றவர்​களுக்​கும், இதே குணா​திசயம் இருப்​பதை நான் பார்த்​திருக்​கிறேன். பதவி வரும்​போது, பணி​வும், துணி​வும் வர வேண்​டும். பணிவுக்​காக, துணிவை இழக்​கும் சுயமரி​யாதை அற்​றவர்​கள் அல்ல எங்​கள் கூட்​டம்.

எடுத்​ததுமே அரசி​யல் கட்​சியை ஆரம்​பிக்​காமல் முதலில் தொண்டு செய்​து, பிறகு அரசி​யலுக்கு வந்து மூத்​தவர்​களிடம், மூத்த கட்​சிகளிடம் அறி​வுரை பெற்​றுக்​கொண்டு கட்சி தொடங்கி இருக்​கிறேன். இதில், மாற்​றுக் கருத்து இருந்தே ஆக வேண்​டும். அதற்கு பெயர் தான் ஜனநாயகம். ஆனால், நாடு என்று வரும்​போது நாம் கூடி நின்​றாக வேண்​டும்.

ரிமோட்டை தூக்கி டிவி மேல் போட்​டீர்​களே… பிறகு ஏன் திமுக கூட்​ட​ணிக்கு போனீர்​கள்? என்​கிறீர்​கள். ரிமோட்டை தூக்கி போட்​டேன், அது​தான் ஜனநாயகம், அதை விமர்​சிக்க வேண்​டும். ஆனால், நான் தூக்​கிப்​போட்ட ரிமோட்டை வேறு ஒரு​வன் தூக்​கிட்டு ஓடிட்​டான். ரிமோட் அங்கு போகக்​கூ​டாது. ரிமோட் மாநிலத்​தில் தான் இருக்க வேண்​டும். கல்​வி​யும் அப்​படித்​தான் இருக்க வேண்​டும். அந்த ரிமோட்டை கொடுப்​போ​மா… எடுத்​துட்டு வா ஒளித்​து​வைத்​துக் கொள்​வோம்.

ஒருத்​தர் மீது ஒருத்​தர் அடித்​துக் கொள்ள வேண்​டாம். யாராவது வந்து ரிமோட்டை தூக்​கிக் கொண்டு போய்​விடு​வார்​கள். அப்​படின்னு எடுத்த முடிவு​தான் இந்த கூட்​ட​ணி. புரிந்​தால் புரிந்து கொள்​ளுங்​கள், இல்லை என்​றால் சும்மா இருங்​கள். ஜனநாயகம் என்று வந்து விட்​டால் இந்த தொல்​லை​கள் எல்​லாம் இருந்தே தீர வேண்​டும். புரிந்து கொள்ள வேண்​டும். அது வேண்​டாம் என்​றால், மாற்று அரசி​யல் என்​பது பாசிசம். அது எங்​களுக்கு வேண்​டாம். இவ்​வாறு அவர் பேசி​னார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *