மாநிலத்தில் டெங்கு பாதிப்பு குறித்து கர்நாடக அரசு சிறிதும் கவலைப்படவில்லை என்று அந்த மாநில பாஜக தலைவர் பி.ஓய். விஜயேந்திரா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாஜக தலைவர் கூறுகையில்,
கர்நாடக மாநிலத்தில் டெங்கு பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருவதோடு, இறப்புகளும் அதிகளவில் பதிவாகி வருகின்றது. இந்த நிலையில் டெங்கு பாதிப்பு குறித்து அரசு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை, இதுதொடர்பான அமைச்சர் டெங்கு பாதிப்பை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
எனது தொகுதியில் டெங்கு பாதிப்பால் ஒன்பது மாத குழந்தை உயிரிழந்தது. இந்த விவகாரத்தைச் சட்டப் பேரவையிலும் குரல் எழுப்புவோம். மேலும் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரைத் தாக்கிய பேசிய அவர், ரியல் எஸ்டேட்டில் மட்டுமே ஆர்வம் செலுத்தி வருவதாகவும் கூறினார்.