ரீநியூ கிரீன் எனர்ஜியில் 31.20% பங்குகளை வாங்கும் ஜிண்டால்!

Dinamani2f2024 12 172fccgqfrfk2fjindal.png
Spread the love

புதுதில்லி: ‘ரீனியூ கிரீன் எனர்ஜி’ நிறுவனத்தின் 31.20% பங்குகளை வாங்க, ஜிண்டால் சா ஒப்பந்தம் செய்துள்ளது. இருப்பினும், பங்கு கையகப்படுத்துதலின் நிதி விவரங்களை குறித்து நிறுவனம் வெளியிடவில்லை.

ரிநியூ கிரீன் எம்எச்எச் ஒன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 31.20% பங்குகளை கையகப்படுத்தவும், ரிநியூ கிரீன் எனர்ஜி சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் பங்கு கொள்முதல் ஒப்பந்தம் செய்துள்ளதாக ஜிண்டால் சா தனது தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: டிசம்பர் 20 அன்று சந்தைக்கு வரும் வென்டிவ் ஹாஸ்பிடாலிட்டியின் ரூ.1,600 கோடி ஐபிஓ!

சலுகை விலையில் மின்சாரம் வாங்கும் நோக்கில் இந்த கையகப்படுத்தல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மே 31, 2025-க்குள் பரஸ்பரம் தீர்மானிக்கப்பட்டு கையகப்படுத்தலை முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக ஜிண்டால் சா தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *