ரூபாய் குறியீடு பிரச்சினையே இல்லை: ப.சிதம்பரம் கருத்து | there is no issue with rupee symbol P Chidambaram

1354376.jpg
Spread the love

சிவகங்கை: ரூபாய் குறியீடு ஒரு பிரச்சினையே இல்லை. அவரவர் விருப்பப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

சிவகங்கையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மத்திய அரசு தமிழகத்துக்கு தர வேண்டிய நிதியை மாநில அரசு ஏற்பதாக பட்ஜெட்டில் அறிவித்ததை வரவேற்கிறேன். இனிமேலாவது மத்திய அரசு வெட்கப்பட்டு, தமிழகத்துக்கு உரிய நிதியை ஒதுக்கும் என நம்புகிறேன்.

ரூபாய் குறியீடு அந்தந்த மொழி அடிப்படையில் குறிப்பிடப்படும். ஆவணங்களில் ரூபாயை Rs என்று தான் பயன்படுத்துகிறோம். இந்தி எழுத்தில் கோடிட்ட ₹ என்ற குறியீட்டைப் பயன்படுத்த முடிந்தால் பயன்படுத்தலாம். எந்த ரூபாய் குறியீட்டை பயன்படுத்துவது என்பது பிரச்சினையே அல்ல. குறியீட்டுக்கு பின்னர் குறிப்பிடப்படும் எண்களில்தான் மதிப்பே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *