2025 தொடங்கியது முதல் மிக மோசமான சரிவைச் சந்தித்த ஆசிய நாடுகளின் நாணய மதிப்புகளில் இந்திய ரூபாய் மதிப்பு முதன்மையாக உள்ளது.
2024 ஜனவரியில் ரூபாய் மதிப்பு 83.21 காசுகளாக இருந்தது. தற்போது சுமார் 3% வரை சரிந்துள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதும் விதித்த வரி ஏற்றம், வெளிநாட்டு நிதி வெளியேற்றம் ஆகியவை ரூபாய் மதிப்பு சரிவதற்கான முதன்மை காரணங்களாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்திய பங்குச் சந்தை இன்று சரிவுடன் தொடங்கியது. இதன் எதிரொலி நாணய மதிப்பிலும் நீடித்தது.
நேற்றைய வணிகத்தில் வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணியில் ரூபாய் மதிப்பு 39 காசுகள் சரிந்து ரூ.87.46 ஆக முடிந்தது. இன்றைய வணிக நேர முடிவில் மேலும் 15 காசுகள் சரிந்து இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 87.58 காசுகளாக நிறைவு பெற்றது.