HR88B8888 என்றால் என்ன?
HR88B8888 என்பது ஏலத்தின் மூலம் பிரீமியத்தில் வாங்கப்பட்ட ஒரு தனித்துவமான VIP எண் எனக் கருதப்படுகிறது. HR என்பது வாகனம் ஹரியானாவில் பதிவு செய்யப்பட்டுள்ளதைக் குறிக்கும் மாநிலக் குறியீடு.
88 என்பது வாகனம் பதிவு செய்யப்பட்டுள்ள ஹரியானாவின் குறிப்பிட்ட போக்குவரத்து அலுவலகம் (RTO) அல்லது மாவட்டத்தைக் குறிக்கிறது.
குறிப்பிட்ட RTO-வில் உள்ள வாகனத் தொடர் குறியீட்டைக் குறிக்க B பயன்படுத்தப்படுகிறது. 8888 என்பது வாகனத்திற்கு ஒதுக்கப்பட்ட தனித்துவமான, நான்கு இலக்க பதிவு எண்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஏப்ரல் மாதத்தில், கேரளாவைச் சேர்ந்த கோடீஸ்வரரான வேணு கோபாலகிருஷ்ணன், தனது லம்போர்கினி உருஸ் பெர்ஃபார்மண்டே காருக்கான பதிவு எண்ணாக “KL 07 DG 0007” எண்ணை ரூ.45.99 லட்சத்திற்கு வாங்கினார்.
இந்த எண்ணுக்கான ஏலம் ரூ.25,000-ல் தொடங்கியது. ‘0007’ எண் ஜேம்ஸ் பாண்ட் குறியீட்டை அடையாளப்படுத்துகிறது எனப் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.