Last Updated:
கேரளாவில் சூப்பர் மார்க்கெட் ஊழியர் ஒருவர் லாட்டரியில் ரூ. 10 கோடி வென்றிருக்கிறார்.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், பரப்பனங்காடி எனும் பகுதியில் உள்ள நெடுவாவைச் சேர்ந்தவர் பத்மநாபன் (51). இவர் கேரளா, கோழிச்சேனாவில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் கடந்த 8 வருடங்களாக ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி, பத்மநாபன் பாலகாட்டில் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். வழக்கமாக தொடர்ந்து லாட்டரி வாங்கும் பழக்கம் இல்லாத பத்மநாபன், கோடைகால சிறப்பு லாட்டரி என்பதால் அதனை வாங்கியுள்ளார்.
கடந்த 26 ஆம் தேதி லாட்டரி சீட்டை வாங்கிய அவர், அதன்பிறகு தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது. அதன்பிறகு இன்று காலை லாட்டரி பரிசு வென்றவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டது.
அப்போது பத்மநாபன் அதில் முதல் பரிசான ரூ. 10 கோடியை வென்றுள்ளார். இந்த விவகாரம் அம்மாநிலம் முழுவதும் வேகமாக பரவி தற்போது, கேரளாவின் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
ரூ. 10 கோடி வென்ற சூப்பர் மார்க்கெட் ஊழியர்; தமிழ்நாட்டு கோயிலில் தரிசனம் முடித்த கேரள நபருக்கு இன்ப அதிர்ச்சி
