ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

dinamani2F2025 09 302F55rnforl2Fennore accident ed
Spread the love

மின்துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் மின்வாரிய தலைவா் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆகியோரை உடனே நேரடியாகச் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கிடவும், அவர்களது உடலை அவர்களது சொந்த மாநிலத்திற்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆணையிட்டுள்ளேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக நிலை 4-ல் கொதிகலன் பிரிவில் நடைபெறும் கட்டுமானப் பணியில் சாரம் சரிந்து இன்று (செப். 30) விபத்து நேர்ந்தது.

இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்தவர்கள் கவலைக்கிடமான சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு மேலும் 5 பேர் உயிரிழந்தனர். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்தது.

இதையும் படிக்க | தவெகவின் புகாரை மறுக்கும் அரசு: கரூரில் நடந்தது என்ன? – அதிகாரிகள் விளக்கம்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *