கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளின் முக்கிய தளபதியான அமித் ஹன்ஸ்தா, பொகாரோ மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் ஹன்ஸ்தா, மேற்கு சிங்பூம், செரைகேலா-கர்சவான் மற்றும் குந்தி மாவட்டங்களின் மண்டலத் தளபதியாக கடந்த பத்தாண்டுகளாக தீவிரமாக செயல்பட்டு வந்ததாகவும், அவரது தலைக்கு அரசு தரப்பில் ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும், பாதுகாப்புப் படையினர் மீதான தாக்குதல்கள், சாலை கட்டுமானம் மற்றும் பிற அரசுத் திட்டங்களைத் தடுத்ததற்காக அமித் ஹன்ஸ்தா மீது காவல் நிலையங்களில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஜூலை மாதம் வரை, ஜார்க்கண்ட் முழுவதும் பாதுகாப்புப் படையினருடன் நடந்த 14 துப்பாக்கிச் சண்டைகளில் 21 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி போஸ்டா வனப் பகுதியில் நடந்த மோதலில் நக்சல் தளபதி அருண் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2024-25 இல் அண்டை மாநிலமான சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 400-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் ஜூன் மாதம் தெரிவித்தார்.
2024 இல் சத்தீஸ்கர் முழுவதும் 217 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர்.
2026 மார்ச் 31-க்குள் மாவோயிசத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது.