ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 191 ஆக உயர்வு!

Dinamani2f2025 03 072fnscj4s4j2fmoney.jpg
Spread the love

இந்தியாவில் ரூ.100 கோடிக்கும் மேல் சொத்து வைத்திருக்கும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது என நைட் ஃபிராங்க் அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 7 கோடீஸ்வரர்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 191 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 26 புதிய கோடீஸ்வரர்கள் இந்த பட்டியலில் இணைந்துள்ளனர்.

உலகளாவிய பெரும் கோடீஸ்வரர்களின் சொத்து விவரங்களை வெளியிடும் நைட் ஃபிராங்க் அமைப்பு சமீபத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான சொத்து அறிக்கையை வெளியிட்டுள்ளது. கோடீஸ்வரர்கள் நிறைந்த உலகத்தில், இந்தியாவில் 191 பேர் ரூ.100 கோடிக்கும் அதிகமாக சொத்துகளை வைத்துள்ளனர் என்றும், 2024 இல் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 6 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் பெரும் கோடீஸ்வரர்களில் சுமார் 40 சதவிகிதம் பேர் (எச்என்டபிள்யூஅய்) ரூ.90 கோடிக்கும் மேற்பட்ட சொத்து மதிப்புள்ள தனி நபர்களின் எண்ணிக்கை 9 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 2.24 லட்சமாக இருந்த நிலையில் தற்போது 2.34 லட்சமாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 4.4 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

அமெரிக்காவைத் தொடர்ந்து சீனா 4.7 லட்சம் கோடீஸ்வரர்களையும், இந்தியா 85,698 கோடீஸ்வரர்களையும், அதன் பிறகு ஜப்பான் சுமார் 65,000 கோடீஸ்வரர்களையும் கொண்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 2023 ஆம் ஆண்டில் 1 கோடி அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.87 கோடி) சொத்து மதிப்புள்ளவர்களின் எண்ணிக்கை 80,686 ஆக இருந்தது. இது 2024 இல் 85,698 ஆக அதிகரித்துள்ளது. இது 6 சதவிகித உயர்வாகும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *