ரூ. 1300 கோடியில் உருவாகும் ராஜமௌலி திரைப்படம்?

dinamani2F2025 09 032Fk1j9mi2f2FGz5MktfbAAEupp2.jfif
Spread the love

இயக்குநர் ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்ஆர்ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபுவை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.

இப்படம் காசியின் வரலாற்றைப் பேசும் தொன்மக் கதையாக உருவாகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக பல கோடி ரூபாயில் அவர் அமைத்த செட் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வைரலானது. தற்போது, படத்தின் படப்பிடிப்பு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இரண்டு பாகமாக உருவாகும் இப்படத்தின் பட்ஜெட் ரூ. 1300 கோடி என தகவலகள் தெரிவிக்கின்றன. தகவல் உண்மையானால், இதுவே இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமாகும்.

உலகம் முழுவதும் 130 மொழிகளில் இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதால் ஹாலிவுட்டுக்கு இணையான வணிகமும் நடைபெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ‘லோகா’ படத்தில் கன்னடர்களைக் குறித்து சர்ச்சைக்குரிய வசனம்? படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

reports suggests director ss rajamouli and mahesh babu movie budget is rs.1300 crores

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *