ரூ.17 லட்சம் மதிப்பிலான குட்கா போதைப்பொருள் – தீயிட்டு அழித்த வேலூர் போலீஸ்

Spread the love

வேலூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டுகளில் பதிவுசெய்யப்பட்ட 18 `குட்கா’ வழக்குகளில் 1,765 கிலோ எடையிலான குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. இதன் மதிப்பு சுமார் 17 லட்சம் ரூபாய் என்கிறது போலீஸ். இந்த போதைப் பொருள்களை நீதிமன்ற உத்தரவின்பேரில், பாதுகாப்பான முறையில் அழிக்க வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க் அறிவுறுத்தினார்.

தீயிட்டு அழிக்கப்பட்ட குட்கா

இதையடுத்து, வேலூர் சரக டி.ஐ.ஜி தர்மராஜன் மேற்பார்வையில், வேலூர் மாவட்ட எஸ்.பி சிவராமன் முன்னிலையில் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு, இன்று காலை பேரணாம்பட்டு காவல் நிலைய எல்லைக்குஉட்பட்ட தரைக்காடு பகுதிக்கு கொண்டுசென்று ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியுடன் பள்ளம் தோண்டி தீ வைத்து எரித்து அழிக்கப்பட்டது.

Loading…

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *