மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் வசிப்பவர் சுஹாஷ் (48). மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மயிலாடுதுறை ஸ்டேட் பேங்க் ரோடு அருகே ஸ்ரீ கிருஷ்ணா டெஸ்டிங் ஏஜென்சி என்ற பெயரில் தங்க நகைகளை உருக்கிக் கட்டிகளாக மாற்றி விற்பனை செய்யும் தொழில் செய்துவருகிறார்.

இவர் தனது கடையில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனைத் தனக்கு உதவியாளராக கடந்த வாரம் பணிக்குச் சேர்த்துள்ளார். நேற்று வழக்கம் போல் கடை செயல்பட்டுள்ளது.
மாலை கடையில் சுஹாஷ் மற்றும் அந்தச் சிறுவன் என இருவர் மட்டுமே இருந்துள்ளனர். இந்நிலையில், சுகாஷ் ஒன்றரை கிலோ நகைகளை உருக்கி அதனைக் கட்டியாக மாற்றினார். இதையடுத்து அதை எடை போட்டு வருமாறு சிறுவனிடம் கொடுத்துள்ளார்.
அதை எடுத்துக்கொண்டு கடையின் முன்பகுதிக்கு எடை போடப் போன சிறுவன் மீண்டும் கடையின் உள்பகுதிக்கு வரவில்லை. நீண்ட நேரம் ஆனதால் சுஹாஷ் வந்து பார்க்க சிறுவனைக் காணவில்லை.
சந்தேகமடைந்த சுஹாஷ் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். மேலும், இது குறித்து மயிலாடுதுறை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
அதை எடுத்துக்கொண்டு கடையின் முன் பகுதிக்கு எடை போட போன சிறுவன் மீண்டும் கடையின் உள்பகுதிக்கு வரவில்லை. நீண்ட நேரம் ஆனதால் சுஹாஷ் வந்து பார்க்க சிறுவனைக் காணவில்லை.
சந்தேகமடைந்த சுஹாஷ் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். மேலும், இது குறித்து மயிலாடுதுறை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

மயிலாடுதுறை எஸ்பி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து தனிப்படை அமைத்து சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஒன்றரை கிலோ தங்கக் கட்டிகளுடன் வெளியூருக்குத் தப்பிச் செல்வதற்காக மயிலாடுதுறை ரயில்வே ஸ்டேஷனில் பதுங்கி இருந்த சிறுவனை போலீஸார் பிடித்ததுடன் தங்கக் கட்டிகளையும் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து சிறுவனிடம் விசாரணை நடத்தி விட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர். சுமார் ரூ.2 கோடி மதிப்புடைய தங்க நகைக் கட்டிகளுடன் ஓடிய சிறுவனை 3 மணி நேரத்தில் மயிலாடுதுறை போலீஸார் பிடித்தனர்.