“ரூ.4 லட்சம் கோடி ஊழல்; ஆதாரத்துடன் விவரங்களை அளித்திருக்கிறோம்" – ஆளுநரை சந்தித்த எடப்பாடி பேட்டி

Spread the love

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கிறது. எனவே, தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் தீவிரமாக இயங்கத் தொடங்கிவிட்டன. ஆளும் திமுக அரசு தொடர் திட்டங்களை செயல்படுத்தியும், எதிர்க்கட்சியாக அதிமுக அரசின் மீதான குற்றச்சாட்டுகளை மக்கள் முன் கொண்டு சென்றும் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. இந்த நிலையில், இன்று எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார். சுமார் ஒருமணி நேரம் நீடித்த இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அப்போது, “2021-ம் ஆண்டு விடியா திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழ்நாட்டில் நடத்திய ஊழல்களின் விவரங்களை இன்று (6.12026) ஆளுநரிடம் வழங்கினோம். இன்றைய தினம் கடந்த நான்கரை ஆண்டுகளாக விடியா தி.மு.க அரசின் ஊழல் நிறைந்த ஆட்சியில், துறைகள் தோறும் கொள்ளை அடிக்கப்பட்ட தொகைகளின் அளவு மற்றும் அதன் விவரங்களை ஆளுநரிடம் வழங்கி, தி.மு.க அரசு செய்த ஊழல்கள் அனைத்திற்கும் போதிய ஆதாரம் உள்ளதால், முழுமையான விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தினேன்.

கடந்த 56 மாதங்களாக, வெளித்தன்மை இல்லாமல், ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல் அதிகார வர்க்கத்தின் உச்சத்தில் இருக்கும் தி.மு.க குடும்பம் கோடிக்கணக்கில் கொள்ளையடித்து, தமிழ்நாட்டை மிகப்பெரிய கடன் சுமையில் தள்ளியுள்ளது. இதை பொறுப்புள்ள எதிர்கட்சியாக சுட்டிக்காட்டுகிறோம்.

தி.மு.க கடந்த 56 மாதங்களாக வருடத்திற்கு ஒரு லட்சம் கோடி கடன் வாங்கி, தமிழ்நாட்டை மிக கேவலமான வகையில் நிர்வாகம் செய்து, ஏற்கனவே இருந்த கடனை விட கூடுதலாக 4 லட்சம் கோடி கடனை அதிகரித்ததுதான் நிர்வாகத் திறனற்ற தி.மு.க-வின் சாதனை.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்திலேயே விடியா தி.மு.க அரசு கொள்ளையடித்த 30 ஆயிரம் கோடி ரூபாய்களை மகனும், மருமகனும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருவதாக, அப்போதைய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்ததை நீங்களே அறிவீர்கள்.

ஒரு ஆண்டுக்கே இவ்வளவு என்றால், இந்த நான்கரை ஆண்டுகளில் எவ்வளவு கொள்ளை அடித்திருப்பார்கள் என்று நீங்களே கணக்கிடுங்கள். ஊழல் செய்ததை தவிர இவர்கள் தமிழக மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை.

விஞ்ஞான முறையில் ஊழல் செய்யக்கூடிய கட்சி திமுக. அந்த வகையில் அரசின் துறைகள்தோறும் மிக அதிக அளவில் ஊழல் செய்து தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

உதாரணத்திற்கு

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை – 64,000 கோடி

ஊரக வளர்ச்சி (ம) பஞ்சாயத்து ராஜ் துறை – 60,000கோடி

சுரங்கம் மற்றும் கனிம வளத் துறை – 60,000கோடி

எரிசக்தித் துறை – 55,000கோடி

கலால் வரி (டாஸ்மாக்) – 50,000கோடி

பத்திரப்பதிவுத் துறை – 20,000கோடி

நெடுஞ்சாலைத்துறை – 20,000

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

நீர் ஆதாரத் துறை – 17,000

சென்னை மாநகராட்சி – 10,000கோடி

தொழிற் துறை – 8,000

பள்ளிக் கல்வித்துறை – 5,000கோடி

மக்கள் நல்வாழ்வுத் துறை – 5,000 கோடி

வேளாண்மைத் துறை – 5,000 கோடி

சமூக நலத்துறை – 4,000 கோடி

உயர் கல்வித்துறை – 1,500கோடி

இந்து சமய அறநிலையத்துறை – 1,000கோடி

ஆதி திராவிடர் நலன் துறை – 1,000கோடி

சுற்றுச் சுழல் மற்றம் வனத்துறை – 750கோடி

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை – 500கோடி

சிறைத் துறை – 500கோடி

கற்றுலாத் துறை – 250கோடி

பால் வளத்துறை – 250 கோடி

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அரசு துறைகள்தோறும் கொள்ளையடிப்பது எப்படி என்பதிலேயே தி.மு.க குறியாக இருந்ததால், ஆட்சி நிர்வாகம் சீராக இல்லாமல் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்தது. மக்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் தொழில் துவங்க வந்த முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்கு சென்றுவிட்டன.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *