இந்த நிலையில், வாக்குப் பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, தில்லி முதல்வர் அலுவலகத்தின் ஊழியர்கள் இருவரிடமிருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள ரொக்கப் பணம் மீட்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான இருவரையும் தில்லி காவல்துறையினர் கைது செய்தனர்.
இதுகுறித்து தில்லி காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், “பணம் எடுத்துச் செல்வதாக எங்களுக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. பறக்கும் படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று இருவரையும் பிடித்தனர். முதற்கட்ட தகவலின்படி, இருவரும் தில்லி முதல்வர் அலுவலகத்தில் பணிபுரிகின்றனர். அவர்களது பெயர் கௌரவ் மற்றும் அஜித் எனத் தெரியவந்துள்ளது
அவர்களிடமிருந்து ரூ 5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுபற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது. பணத்திற்கான உரிய ஆவணங்கள் மற்றும் அது எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. எங்கிருந்து அவர்கள் எடுத்துச் சென்றார்கள் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இதுவரை எங்களுக்குத் தெரிந்தபடி, ஒருவர் முதல்வரின் உதவியாளராகப் பணிபுரிந்தவர் என்றும், மற்றொருவர் ஓட்டுநர் என்றும் தெரியவந்துள்ளது” என்றனர்.
கடும் கட்டுப்பாடுகள் மற்றும் அதிகளவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள வேளையில் தேர்தல் நடைபெறும் சில மணி நேரங்களுக்கு முன்னதாக முதல்வர் அலுவலக ஊழியர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.