ரூ.50 லட்சத்துக்கு ஆடம்பர பைக் கேட்டு பெற்றோரை துன்புறுத்திய இளைஞர் கம்பியால் அடித்துக்கொன்ற தந்தை! | Father beats son to death with a rod after he demands a ₹50-lakh luxury bike

Spread the love

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த வஞ்சியூரைச் சேர்ந்தவர் வினயானந்த் (52). இவரது மகன் ஹிருத்திக்(28).

ஹிருத்திக் ஆடம்பர பைக் வேண்டும் பெற்றோரிடம் தகராறு செய்துவந்தார். தொல்லை தாங்கமுடியாமல் லோன் எடுத்து 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு பைக் வாங்கி கொடுத்தனர் பெற்றோர்.

இதற்கிடையே அக்டோபர் மாதம் 21-ம் தேதி தனது பிறந்த நாளுக்கு முன்பு 50 லட்சம் ரூபாய்க்கு இரண்டு ஆடம்பர பைக்குகள் வாங்கித்தரவேண்டும் என ஹிருத்திக் பெற்றோருக்கு தொல்லை கொடுத்துவந்தார்.

ஆடம்பர பைக் கேட்டதால் தந்தையால் கொலை செய்யப்பட்ட ஹிருத்திக்

ஆடம்பர பைக் கேட்டதால் தந்தையால் கொலை செய்யப்பட்ட ஹிருத்திக்

கடந்த அக்டோபர் மாதம் 9-ம் தேதி ஆடம்பர பைக் கேட்டு பெற்றோரிடம் வாக்குவாதம் செய்தார். ஒரு கட்டத்தில் அரிவாளால் தந்தையை தாக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து குழி தோண்ட பயன்படுத்தும் கம்பியால் தனது மகனின் தலையில் பலமாக அடித்தார் வினயானந்த்.

இதில் படுகாயம் அடைந்து மயங்கிய ஹிருத்திக்கை திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார் தந்தை வினயானந்த்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *