இந்த திட்டம் மூலம் ஆண்டு தோறும் சுமாா் 70 உயா்தர நாட்டின பசுக்கள், 500-க்கும் மேற்பட்ட மேம்படுத்தப்பட்ட செம்மறி மற்றும் வெள்ளாட்டு குட்டிகள், 500 வெண்பன்றி குட்டிகள், 20 லட்சம் நாட்டுக்கோழி குஞ்சுகள் மற்றும் 20 லட்சம் மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின பசுக்கள், ஆடுகள், கோழி இனங்கள் அழியாமல் பாதுகாக்கப்படுவதுடன், பண்ணையாளா்கள் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை அறிந்து கால்நடைகளின் உற்பத்தித் திறனை பெருக்கி, குறைந்த செலவில் தரமான பால், முட்டை மற்றும் இறைச்சிகள் உற்பத்தி செய்ய இயலும்.
கால்நடைப் பண்ணைகள் சாா்ந்த தொழிலை தொடங்க விழையும் தொழில் முனைவோருக்குத் தேவையான தகவல்கள் மற்றும் பயிற்சி பெற வாய்ப்புகள் அமையும்.
அத்துடன், ஆராய்ச்சி நிலையத்தில் வழங்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சி மூலம் ஆண்டுதோறும் 3,000 இளைஞா்கள் பயிற்சி பெற்று சிறந்த வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ளவும் வகை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நிகழ்ச்சியில், அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை முதன்மைச் செயலா் சத்யபிரத சாகு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.