இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த 2023, மே 19-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்த நிலையில், இரண்டு ஆண்டுகளை கடந்த பின் தற்போது ரூ.5,956 கோடி மதிப்பிலான நோட்டுகள் வங்கிக்கு திரும்பவில்லை. இதன்மூலம் 98.33 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்பட்டன’ எனத் தெரிவிக்கப்பட்டது.
ரூ.5,956 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பவில்லை: ரிசா்வ் வங்கி
