ரூ. 76,000 -ஐ நெருங்கும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

dinamani2F2025 08 292Fuobvzb2b2FPTI04302025000143B
Spread the love

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து நான்காவது நாளாக வெள்ளிக்கிழமையும் அதிகரித்துள்ளது.

வரலாற்றில் இரண்டாவது முறையாக ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 75,760 -க்கு விற்கப்படுகிறது. இதற்கு முன்னதாக கடந்த ஆக. 8 ஆம் தேதி புதிய உச்சமாக இதே விலையில் விற்பனையானது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை ஒரு சவரனுக்கு ரூ. 520 உயர்ந்து ரூ. 75,760 -க்கும் ஒரு கிராம் ரூ.  9,470 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை மூன்று நாள்களுக்கு பிறகு கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி ஒரு கிராம் ரூ. 131 -க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,31,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நில நாள்களாகவே ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

ஓணம் பண்டிகை காலத்தையொட்டி, கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தங்கத்தின் விலை தொடர் ஏற்றம் கண்டு வருகின்றது. செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ. 400, புதன்கிழமை கிராமுக்கு ரூ. 280, வியாழக்கிழமை கிராமுக்கு ரூ. 120 அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : சங்கா் ஜிவால் இன்று ஓய்வு! புதிய டிஜிபி யார்?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *