ரெட்ரோ: 3-வது பாடல் அப்டேட்!

Dinamani2f2025 04 112f9s0vd9lm2fa4e768c1 Eeb8 4845 B7bf 4b65682b67a8.jpg
Spread the love

சூர்யாவின் ரெட்ரோ படத்தின் 3-வது பாடல் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் ரெட்ரோ. ஆக்‌ஷன் கலந்த காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. பூஜா ஹெக்டே நாயகியாகவும் நாசர், பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

ரெட்ரோ படத்துக்காக நடிகர் சூர்யா தாய்லாந்துக்குச் சென்று தற்காப்பு கலைகளைப் பயின்றுள்ளார். சமீபத்தில் வெளியான டீசர், முதல் பாடல் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன.

முதலில் வெளியான கண்ணாடிப் பூவே மற்றும் சமீபத்தில் வெளியான கனிமா பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. மேலும், கனிமா பாடலில் ஆடிய நடனத்துக்கு அனைவரின் பாராட்டு மழையில் நனைந்தார் பூஜா ஹெக்டே.

பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இந்தப் பாடலை பின்னணிப் பாடகர்கள் சித் ஸ்ரீராம், ஷான் வின்சென்ட் டி பால் ஆகியோர் பாடியுள்ளனர்.

இந்த நிலையில் ‘தி ஒன்’ என்ற பெயரில் 3-வது பாடல் நாளை (ஏப்.12) வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: குட் பேட் அக்லி முதல்நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *