மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை 8.30 மணியளவில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் அசாமின் சில்சாரில் இருந்து மேற்கு வங்கத்தின் சேல்டா மாவட்டம் நோக்கிப் சென்று கொண்டிருந்தது.
நியூ ஜல்பைகுரியில் பகுதியில் சிக்னல் கோளாறு காரணமாக பயணிகள் ரெயில் நின்ற போது பின்னால் வந்த சரக்கு ரெயில் சிக்கனலை கவனிக்கமாமல் வேகமாக வந்து பயணிகள் ரெயிலின் பின்பக்க பெட்டிகள் மீது மோதியது.
15 பேர் பலி
இந்த விபத்தில்கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயிலின் 5 பெட்டிகள் வரை சேதமடைந்தன. மேலும் சரக்கு ரெயிலில் இருந்த பெட்டிகளும் சரிந்து விழுந்தன. பயணிகள்ரெயிலின் ஒரு பெட்டி அந்தரத்தில் தொங்கியபடி இருந்தது. தகவல் அறிந்ததும் ரெயில்வே போலீசார், மாநில மற்றும் தேசிய மீட்பு படையினர் ரெயில் பெட்டிகளுக்குள் சிக்கி இருந்த பயணிகளை மீட்டனர். விபத்தில் 15 பேர் பலியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் 60-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரது நிலைமை மோசமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தாபானர்ஜி உள்ளிட்டோர் இரங்கல் தெரவித்து உள்ளனர்.
ரூ.10 லட்சம் நிவாரண உதவி
மேலும் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும், பலத்த காயம் அடைந்த வர்களுக்கு ரூ. 2.5 லட்சம், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் அறிவித்து உள்ளது.மனித தவறே ரெயில் விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரெயில் விபத்துக்கு ரெயில்வே துறையின் கவனக்குறைவே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதற்கு பொறுப்பு ஏற்று ரெயில்வே மந்திரி அஸ்விணி வைஷ்ணவ்பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்து உள்ளன. ராகுல்காந்தியும் கடுமையாக சாடி உள்ளார்.
19 ரெயில்கள் ரத்து
காங்கிரஸ்தலைவர் கார்கே கூறும்போது, மக்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்க ரெயில்வே அமைச்சருக்கு நேரமில்லை. கடந்த 10 ஆண்டுகளாக மோடி அரசு ரெயில்வே துறையை மோசமாக நிர்வகித்து வருகிறது. ரெயில்வேகை கண்டு கொள்ளாமல் விட்டதற்கு மோடியை பொறுப்பேற்க செய்வோம் என்று தெரிவித்து உள்ளார்.
விபத்து தொடர்பாக தகவல்களை பெற ரெயில்வே சார்பில் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த ரெயில் விபத்தால் அவ்வழியே செல்லும் 19 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
விபத்து நடந்தது எப்படி? –
இந்த ரெயில் விபத்து ராணிபத்ரா மற்றும் ரங்கபாணி ரெயில் நிலையங்களுக்கு இடையே நடந்துள்ளது. முன்னதாக, அதிகாலை 5.50 மணி முதல் ராணிபத்ரா ரெயில் நிலையம் மற்றும் சத்தர் ஹட் சந்திப்பு இடையேயான தானியங்கி சிக்னல் பழுதடைந்து உள்ளது. இந்த நிலையில் தான் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 8:27 மணிக்கு ரங்கபாணி நிலையத்தில் இருந்து ராணிபத்ரா ரயில் நிலையம் நோக்கி புறப்பட்டது. தானியங்கி சிக்னல் பழுது காரணமாக சத்தர் ஹாட் இடையே இது நிறுத்தப்பட்டது.
வழக்கமாக ஆட்டோமேட்டிக் சிக்னலில் பழுது ஏற்பட்டால், ரெயில் சிக்னலை கடக்க சம்பந்தப்பட்ட ரெயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்எழுத்துபூர்வ அதிகாரத்தை ரெயில் ஓட்டுநருக்கு அளித்த பின்பே லோகோ பைலட்டால் ரெயிலை இயக்க முடியும். கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலை பொறுத்தவரை பழுதான சிக்னலை கடக்க ராணிபத்ரா ரெயில் நிலைய மேலாளர் ஜிகி 912 எனப்படும் எழுத்துபூர்வ அதிகாரத்தை வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்தே கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் காலை 8:27 மணிக்கு ரங்கபாணி நிலையத்தில் இருந்து ராணிபத்ரா ரயில் நிலையம் நோக்கி புறப்பட்டு உள்ளது.
சிக்னலை கடக்க
ஆனால் அதேநேரம், சரக்கு ரயிலும் ரங்கபாணி நிலையத்தில் இருந்து காலை 8:42 மணிக்கு ராணிபத்ரா நோக்கி புறப்பட்டுள்ளது. சரக்கு ரெயில் பழுதான சிக்னலை கடக்க எழுத்துபூர்வ அதிகாரத்தை எந்த ஸ்டேஷன் மாஸ்டரும் கொடுக்கவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சரக்கு ரயிலின் லோகோ பைலட் விதிகளை மீறி பழுதான சிக்னலை கடந்து சென்றதே விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.
பொதுவாக பழுதான சிக்னலில், ஒரு ரயிலுக்குப் பின் செல்லும் மற்றொரு ரெயில் செல்லும்போது 10 கி.மீ வேகத்திலேயே ஒவ்வொரு சிக்னலையும் கடக்க வேண்டும். ஆனால், இந்த விபத்துக்கு முன்னதாக சரக்கு ரெயில் இந்த விதிமுறையை மீறி அதிவேகமாக சென்று உள்ளது. இதுவும் உயிர் பலி அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது. எனினும், முழுமையான விசாரணைக்கு பின்னரே ரெயில் விபத்துக்கான காரணம் தெரியவரும்.
இதையும் படியுங்கள்: