எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது தொகுதியான ரேபரேலிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
ராகுல் காந்தி சென்ற விமானம் ஃபர்சத்கஞ்ச் விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், வானிலை காரணமாக லக்னெளவில் தரையிறங்கியுள்ளார். அங்கிருந்த சாலை வழியாக ரேபரேலி செல்கிறார்.
எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக ரேபரேலி செல்லவுள்ள ராகுல் காந்தி கட்சித் தொண்டர்கள் மற்றும் மக்களை சந்திக்கவுள்ளார்.
மேலும், பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் ராகுல் காந்தி சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
தொடர்ந்து, கடந்தாண்டு சியாச்சின் தீ விபத்தில் மக்களவை காப்பாற்றும்போது வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் அன்சுமான் சிங்கின் குடும்பத்தினரையும் அவர் சந்திக்கவுள்ளார்.
கடந்த சில நாள்களுக்கு முன்னதாக அன்சுமான் சிங்குக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கீர்த்தி சக்ரா விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.
நேற்று அஸ்ஸாம் மற்றும் மணிப்பூர் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்ததுடன் நாடாளுமன்றத்தில் குரலெழுப்புவோம் என்று உறுதி அளித்திருந்தார்.