ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டி அமேதி-கிஷோரி லால் சர்மா

Save 20240503 135609
Spread the love

பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை 2 கட்ட தேர்தல்கள் முடிந்து உள்ளன. நாட்டிலேயே உத்தரபிரதேசத்தில் அதிகபட்சமாக 80 தொகுதிகள் உள்ளன. உத்தரபிரதேசத்தில் உள்ள அமேதி, ரேபரேலி தொகுதி இந்திரா காந்தி குடும்பத்தினர் போட்டியிடும் தொகுதியாகவே பார்க்கப்படுகிறது.

எதிர்பார்ப்பு

அமேதி தொகுதியில் கடந்த தேர்தலில் ராகுல் காந்தி இங்கு போட்டியிட்டார். அவரை பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிரிதி ராணி ேதாற்கடித்தார்.

இந்த முறை சோனியா காந்தி முதன் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதால் இந்த முறை ரேபரேலி,அமேதி தொகுதியில் யார் போட்டியிடுவார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதற்கேற்றார்போல் இந்த 2 தொகுதி வேட்பாளர்கள் மட்டும் அறிவிக்கப்படாமலம் சஸ்பென்ஸ் நீடித்தது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இதில் போட்டியிடுவார்கள் என்று கட்சியினர் எதிர்பார்ப்பில் இருந்தனர்.

கிஷோரி லால் சர்மா

இந்த நிலையில் ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தியும், அமேதி தொகுதியில் கிஷோரி லால் சர்மாவும் போட்டியிடு வதாக இன்று காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

இனால் கிஷோரி லால் சர்மா பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. கிஷோரி லால் சர்மா காங்கிரஸ் கட்சியின் நீண்ட கால உறுப்பினர் ஆவார். சோனியா காந்தி குடும்பத்தினருக்கு விசுவாசியாக உள்ளார். இதன் காரணமாகவே அவருக்கு அமேதி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது.
அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சி மிகுந்த செல்வாக்குடன் இருப்பதற்கு இவரே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. 1983ம் ஆண்டு முதல் இவர் அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றி வருகிறார். ராஜீவ் காந்தியுடன் நெருக்கமாக இருந்தவர். ராஜீவ்காந்தி மறைவுக்கு பிறகு இந்த தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் பெரியளவில் ஆர்வம் காட்டாத நிலையில் மீண்டும் இந்த தொகுதியில் ராஜீவ் காந்தி குடும்பத்தினரை போட்டியிட வைக்க தீவிரமாக பணியாற்றியவர்.

கடுமையாக உழைத்தவர்

சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு நெருக்கமானவர். தொடர்ந்து அமேதி மற்றும் ரேபரேலி என இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றிக்காக கடுமையாக உழைத்தவர் ஆவார்.
கடந்த தேர்தலில் சோனியா காந்திக்கு பதில் ராகுல் காந்தி அமேதியில் போட்டியிட்டார். ஆனால், அவர் தோல்வி அடைந்தார். அமேதியில் இந்த முறை களமிறங்கும் கிஷோர் லால் சர்மா, பீகார் மற்றும் பஞ்சாப்பிலும் செல்வாக்கு மிகுந்த நபராக உள்ளார்.
அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிக்கு 5-ம் கட்ட வாக்குப்பதிவில் வரும் 20-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அமேதி தொகுதியில் இந்த முறையும் ஸ்மிருதி ராணி போட்டியிடுகிறார். இந்த முறை ரேபரேலி மற்றும் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. ராகுல் காந்தி ரேபரேலி தொகுதிக்கு மாறியிருப்பதை பிரதமர் மோடிதயும், பா.ஜனதா தலைவர்களும் விமர்சித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *