ரைஸ் கீர், கேரட் பஜ்ஜி… அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் – திருச்சியில் கலக்கிய போட்டியாளர்கள்

Spread the love

க்தி மசாலா, சத்யா ஏஜென்சீஸ், நாகா, கோல்டு வின்னர், எக்ஸோ, அஸ்வின் ஸ்வீட்ஸ், ஆர்.கே.ஜி நெய், லலிதா ஜூவல்லரி, சௌபாக்யா, சுப்ரீம் ஃபர்னீச்சர், இந்தியன் ஆயில், மெரிபா பன்னீர், விகடன் பிளே, ஹலோ எஃப்.எம் ஆகியவை இணைந்து வழங்கிய `அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் – 3’ நிகழ்ச்சி, திருச்சியில் வெகு விமர்சையாக நடந்து முடிந்தது.

deena

போட்டியின் விதிமுறைப்படி போட்டியாளர்கள் முதல் சுற்றுக்கு, தங்கள் வீட்டில் இருந்தே உணவுகளைச் சமைத்துக் கொண்டு வந்து காட்சிப்படுத்தியிருந்தனர். திருச்சி பால்பண்ணை அருகில் உள்ள வரகனேரி ஹோட்டல் பத்மாவதியில் இந்தப் போட்டி நடைபெற்றது. சோஷியல் மீடியா பிரபலம் செஃப் தீனா போட்டியின் நடுவராக செயல்பட்டார். போட்டியை அவர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த போட்டியில், 140 – க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குபெற்று, தங்களது நளபாக திறமையை காட்டினர். பெண்களுக்கு இணையாக ஆண்களும் நளபாக கோதாவில் குதித்தனர்.

அருகில் உள்ள திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர் மட்டுமின்றி நாகை, விழுப்புரம் என்று பல மாவட்டங்களில் இருந்தும் வந்து போட்டியாளர்கள் இந்த போட்டியில் பங்கெடுத்தனர். அஸ்வின் ஸ்வீட்ஸ் எம்.டி கலந்துகொண்டு போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினார்.

compedtion

பூசணி அவியல், வஜ்ரவல்லி லட்டு, முருங்கைப் பூ வெங்காய பகோடா, ஆவாரம்பூ பைட்ஸ் போன்ற சைவ உணவுகளும், இறால் வடை, பால் சுறா தொக்கு போன்ற அசைவ உணவுகளும், புளி வெல்லம் சுக்கு பானகம், போன்ற பாரம்பர்ய உணவுகளும் போட்டியாளர்களால் காட்சிப்படுத்தப்பட்டன. இவற்றுடன் பர்மா நாட்டு உணவுகள், இன்றைய ட்ரெண்டில் உள்ள பிரௌனி வகைகளும் போட்டியில் இடம்பெற்றன.

இவற்றின் சுவை, ஆரோக்கியம், செய்முறை, காட்சிப்படுத்திய விதம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் 10 பேரைத் தேர்ந்தெடுத்தார், போட்டியின் நடுவரான செஃப் தீனா. முதல் சுற்று முடிந்து காத்திருந்த போட்டியாளர்களை உற்சாகப்படுத்துவதற்காக ஜாலியான நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன. சிறுவர், சிறுமிகளுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டு, அஸ்வின் ஸ்வீட்ஸ் எம்.டி கரங்களால் பரிசுகள் வழங்கப்பட்டன.

crowd

சத்யா, சௌபாக்யா, நாகா, சுப்ரீம் உள்ளிட்ட ஸ்பான்சர்கள் மூலம் முதல் சுற்றில் சிறப்பாக வீட்டில் இருந்து உணவு சமைத்து எடுத்து வந்து காட்சிப்படுத்தியவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்பாக நளபாக திறமையை காட்டிய பெண்ணுக்கு, `நாகா சுவை சாம்பியன்’ வழங்கப்பட்டது. விகடன் சார்பாகவும் போட்டியாளர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இரண்டாவது சுற்றில் `லைவ் குக்கிங்’ செய்யப்பட்டது. `நாகா பிராண்ட் ரவை, கோல்டு வின்னர் மற்றும் சக்தி மசாலா பயன்படுத்தி மூன்று ரெசிபிகளைச் சமைக்க வேண்டும்’ என்பது இரண்டாம் சுற்றுக்கான விதிமுறையாக சொல்லப்பட்டிருந்தது.இதையடுத்து, சக்தி மசாலா, சத்யா ஏஜென்சீஸ், நாகா, கோல்டு வின்னர், எக்ஸோ, அஸ்வின் ஸ்வீட்ஸ், ஆர்.கே.ஜி நெய், லலிதா ஜுவல்லரி, சௌபாக்யா, சுப்ரீம் ஃபர்னீச்சர், இந்தியன் ஆயில், மெரிபா பன்னீர் ஆகிய ஸ்பான்சர்கள் மூலம் அவர்களுக்குச் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.

compedtion

லைவ் குக்கிங்கில் கலந்துகொண்ட மற்ற ஏழு போட்டியாளர்களும் மேடை ஏற்றப்பட்டு அவர்களுக்கும் ஸ்பான்சர்கள் மூலம் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. பன்னீர் கோலா உருண்டை, ராகி பால் கொழுக்கட்டை, தினை சர்க்கரை பொங்கல், சம்பா ரவை கிச்சடி, தேங்காய் மல்லி சட்னி, கோகினூர் பாசுமதி அரிசி பச்சை பட்டாணி புலாவ், பன்னீர் தயிர் கட்டா, நாட்டுச்சர்க்கரை கேசரி, மதுரை முட்டை, பன்னீர் கிரேவி, நோன்பு கஞ்சி, ரைஸ் கீர், கேரட் பஜ்ஜி, முருங்கைகீரை கேழ்வரகு ஆடை, வரகரிசி சாதம், நாகா வீட் பரோட்டா, பாலக்கீரை சாம்பார், சிக்கன் பொரியல், கேரட் அல்வா என்று 10 போட்டியாளர்களும் தங்களது அமர்க்களமான கைப்பக்குவதை வைத்து, விதவிதமான டிஷ்களை ஆன் த ஸ்பாட்டில் ரெடி செய்து அசத்தினர். இந்த இரண்டாவது சுற்றில், உமையாள், ராஜேஸ்வரி, சாந்தினி ஆகிய மூன்று பேர்களும் அடுத்த சுற்றுக்கு தேர்வானார்கள்.

இதையடுத்து, சக்தி மசாலா, சத்யா ஏஜென்சீஸ், நாகா, கோல்டு வின்னர், எக்ஸோ, அஸ்வின் ஸ்வீட்ஸ், ஆர்.கே.ஜி நெய், லலிதா ஜூவல்லரி, சௌபாக்யா, சுப்ரீம் ஃபர்னீச்சர், இந்தியன் ஆயில், மெரிபா பன்னீர் ஆகிய ஸ்பான்சர்கள் மூலம் அவர்களுக்குச் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.

compedtion

இரண்டாவது சுற்றில் தேர்வு செய்யப்பட்ட இந்த மூன்று பேரும் சென்னையில் நடக்கவிருக்கும் இறுதிப்போட்டியில் பங்கேற்க இருக்கிறார்கள். திருச்சியையே கமகமக்க வைத்த இந்த போட்டி கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *