ரோஜா தொடரின் இரண்டாம் பாகத்தில் எதிர்நீச்சல் தொடர் நடிகை ஹரிப்பிரியா இணைந்துள்ளார்.
கனா காணும் காலங்கள் தொடர் மூலம் சின்ன திரையில் அறிமுகமானவர் ஹரிப்பிரியா . இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளரும்கூட. இணையத் தொடர்களிலும் இவர் நடித்துள்ளார்.
பிரியமானவள் தொடர் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது என சொல்லலாம். இத்தொடரில் நடித்ததன்மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். தொடர்ந்து கண்மணி தொடரில் எதிர்மறையான பாத்திரத்தில் நடித்து தன்னுடைய திறமையை வெளிக்காட்டினார்.
இதையும் படிக்க: எதிர்நீச்சல் – 2 தொடரின் ஒளிபரப்பு நேரம் அறிவிப்பு!
தொடர்ந்து, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் தொடரில் நந்தினி பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ஹரிப்பிரியா. இத்தொடரில் நகைச்சுவை, நக்கல் கலந்த அவரின் பாத்திரம், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது. இத்தொடரின் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்.
இந்த நிலையில், ரோஜா 2 தொடரில் நடிகை ஹரிப்பிரியா இணைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
ரோஜா தொடரின் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக சரிகம தயாரிப்பு நிறுவனம் முன்னதாக தெரிவித்தது. பிரதான பாத்திரங்களில் பிரியங்கா நல்காரி, நியாஸ் நடிக்கிறார்கள்.