இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் கேப்டன் முகமது வாசிம் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
ஆசியக் கோப்பைத் தொடருக்கு முன்னதாக பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் – ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகின்றன.
இந்தத் தொடரில் இதுவரை பாகிஸ்தான் 2 போட்டிகளிலும், ஆப்கானிஸ்தான் அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற ஐக்கிய அரபு அமீரகம் – ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் ஆபார வெற்றி பெற்றது.