டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மாவுக்கு பந்துவீசியது குறித்து ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மனம் திறந்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான போட்டியில் நீடிப்பதற்கான முக்கியமான போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அசத்தியது. அந்தப் போட்டியில் ரோஹித் சர்மா 41 பந்துகளில் அதிரடியாக 92 ரன்கள் குவித்தார். மிட்செல் ஸ்டார்க்கின் ஒரே ஓவரில் 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு ஃபோர் அடித்து 29 ரன்கள் சேர்த்தார்.