‘லக்கி பாஸ்கர்’ படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் துல்கர் சல்மான் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் நாயகியாக மீனாட்சி செளத்ரி நடிக்கிறார்.
லக்கி பாஸ்கர் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றதுடன் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்த முதல் பாடலும் கவனிக்கப்பட்டது.
இதையும் படிக்க: சசிகுமாரின் ஃபிரீடம் கிளிம்ஸ் விடியோ!
இப்படம் தீபாவளி வெளியீடா அக். 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் நாளை (அக்.21) வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
கிங் ஆஃப் கோதா படத்தின் தோல்வியிலிருந்து துல்கர் மீண்டு வருவாரா என்கிற எதிர்பார்ப்பில் அவருடைய ரசிகர்கள் இருப்பதால், டிரைலர் மீது ஆவல் எழுந்துள்ளது.