லக்னோவை வீழ்த்தி எப்படி வென்றது டெல்லி கேப்பிட்டல்ஸ்? | How Delhi Capitals Won their First match against Lucknow Super Giants

Spread the love

முதலில் களமிறங்கிய லக்னோ அணி வீரர்கள், ஆரம்பத்திலேயே டெல்லி அணியின் அபார பந்துவீச்சில் சிக்கி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, போட்டியின் போக்கை அப்படியே டெல்லியின் பக்கம் கொண்டுவந்தார்கள் பவுலர்கள்.

கடந்த சீசனில் காயம் காரணமாக பெஞ்சில் இருந்த தமிழக வீரர் நடராஜன், இந்த சீசனில் முதல் போட்டியிலேயே நான்கு ஓவர்கள் வீசி 29 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து மூன்று முக்கியமான விக்கெட்டுகளை தட்டித் தூக்கி உள்ளார்.

இங்கிடி 3, அக்சர் படேல் 1, குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி லக்னோ அணியின் பேட்டிங் ஆர்டரை தகர்த்தெரிந்தனர்.

18.4 ஓவர்களில் 141 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது லக்னோ அணி.

அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் (35), அப்துல் சமது (36) ரன்கள் எடுத்தனர்.

142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நோக்கில் களமிறங்கினார்கள் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள். ஆனால் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அளிக்கும் விதமாக, முகமது சமி வீசிய ஆட்டத்தின் முதல் ஓவர் முதல் பந்திலேயே K.L. ராகுல் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *