லக்னௌவில் 3 முக்கிய பயணிகள் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை அவசர சேவை எண்ணை தொடர்புகொண்ட மர்மநபர், ஹுசைன்கஞ்ச் மெட்ரோ நிலையம், சார்பக் ரயில் நிலையம் மற்றும் அலம்பாக் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் வெடிகுண்டுகள் வைத்திப்பதாகக் கூறி மிரட்டல் விடுத்து அழைப்பை துண்டிவிட்டார்.
உடனே போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் உஷார்படுத்தப்பட்டு வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் குழுக்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர்களுடன் இணைந்து போலீஸ் குழுக்களும் குறிப்பிட்ட நிலையங்களில் முழுமையான சோதனை நடத்தினர்.