லஞ்சம்; நுகர்வோர் வாணிபக்கழக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை | Madurai Farmers Allege Bribery at Paddy Procurement Centres

Spread the love

மதுரை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே 40-க்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டதாக பொய்யான தகவலை தெரிவித்த நுகர்வோர் வாணிபக்கழக மண்டல மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முறையாக மதுரை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் உரிய நேரத்தில் திறக்கவில்லை” என்று குற்றம்சாட்டி வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

வெளி நடப்பு செய்த விவசாயிகள்

வெளி நடப்பு செய்த விவசாயிகள்

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய கிசான் சங்க மாநிலத் தலைவர் பார்த்தசாரதி,

“விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் உண்மைக்கு புறம்பான தகவலை கூறிய தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகத்தின் மதுரை மண்டல மேலாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து முறைகேடு நடைபெறுகிறது. ஒவ்வொரு நெல் மூட்டைகளுக்கும் லஞ்சமாக பணத்தை பெற்றுக்கொண்டு முறைகேட்டில் ஈடுபடுகிறார்கள். அவர்களைக் கண்டிக்கிறோம்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *