லடாக்கில் மராட்டிய மன்னா் சத்ரபதி சிவாஜியின் சிலை நிறுவப்பட்ட சம்பவம் உள்ளூர் மக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) பகுதிக்கு அருகே 14,300 அடி உயரத்தில் அமைந்துள்ள பாங்காங் ஏரிக் கரையில் சத்ரபதி சிவாஜியின் சிலையை இந்திய ராணுவம் நிறுவியுள்ளது.
லடாக்கின் லேவைத் தளமாகக் கொண்ட ‘14 காா்ப்ஸ்’ ராணுவப் படைப் பிரிவின் தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் ஹிதேஷ் பல்லா கடந்த வியாழக்கிழமை (டிச. 26) இந்த சிலையை திறந்து வைத்தாா்.
லடாக்கில் சிவாஜி சிலை திறக்கப்பட்ட முதல் நாளிலிருந்தே உள்ளூர் மக்களிடையே இது தொடர்பாக விவாதம் எழுந்துள்ளது.