லடாக்: பள்ளத்தாக்கில் பேருந்து விழுந்து 7 பேர் பலி!

Dinamani2f2024 08 222fqmor8mvj2fgvk6vbfxgae1adk.jpg
Spread the love

லடாக்கின் லே மாவட்டத்தில் பேருந்து ஒன்று சாலையை விட்டு விலகி 200 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்ததில் 7 பேர் பலியாகினர். மேலும், 20 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளி ஊழியர்களை திருமண நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்ற பேருந்து, துர்புக் பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்ததாக லே மாவட்ட துணை ஆணையர் சந்தோஷ் சுகதேவ் தெரிவித்தார்.

லடாக்கின் துர்புக் அருகே பணியில் இருந்த இந்திய இராணுவ வீரர்கள், இன்று காலை 11 மணியளவில் 27 பயணிகளுடன் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாகவும், இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாகவும், 3 குழந்தைகள், 17 பெண்கள் உள்பட 20 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் உள்ள ராணுவப் படையினர் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

காயமடைந்த 27 பேரையும் ராணுவ வீரர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு விரைவாக கொண்டு சென்றனர்.

காயமடைந்தவர்கள் முதலில் டாங்ஸ்டேயில் உள்ள இராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

ராணுவத்தின் ஹெலிகாப்டர்கள் மற்றும் 14 விமானங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை லேயில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும், முதுகுத்தண்டில் ஏற்பட்ட காயத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர், மேல் சிகிச்சைக்காக லேயில் உள்ள ராணுவ மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *