இதனிடையே, தகராறில் ஈடுபட்ட குழுவில் உள்ள ஐடி ஊழியர் ஒருவரை மதுபானக் கூடத்திற்கு வெளியே காத்திருந்து காரில் கடத்திச் சென்று லட்சுமி மேனனின் நண்பர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்தக் கடத்தலின்போது நடிகை லட்சுமி மேனனும் நண்பர்களுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.
ஐடி ஊழியரின் நண்பர்கள் அளித்த புகாரின்பேரில், லட்சுமி மேனன் மற்றும் அவரின் நண்பர்கள் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. லட்சுமி மேனனின் நண்பர்களான மிதுன், அனீஷ் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளது.
நண்பர்கள் கைதானதைத் தொடர்ந்து லட்சுமி மேனன் தலைமறைவாகியுள்ளார். ஆள் கடத்தல் விவகாரம் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த எர்ணாகுளம் காவல் துறையினர் முடிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.