விராட் கோலி விரைவில் லண்டனுக்கு குடியேறுவாரென அவரது சிறுவயது பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர கிரிக்கெட் வீரருமான விராட் கோலி (36) டி20 உலகக் கோப்பையுடன் தனது டி20 கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்தார்.
தற்போது, ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். பார்டர் – கவாஸ்கர் தொடரில் ஒரு சதம் அடித்து அசத்தியுள்ளார்.
இந்த நிலையில் தனது குடும்பத்தினருடன் விரைவில் லண்டனுக்கு குடியேறுவாரென அவரது சிறுவயது பயிற்சியாளர் தெரிவித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.
விராட் கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா கூறியதாவது:
தனது குடும்பத்தாருடன் விராட் கோலி லண்டனுக்கு குடியேற இருப்பது உண்மைதான். விரைவில் இந்தியாவை விட்டு வெளியேறுவார். கிரிக்கெட்டினை தவிர்த்து விராட் கோலி அதிகமாக தனது குடும்பத்தாருடன் நேரம் செலவிடுகிறார் என்றார்.
விராட் கோலிக்கு வாமிகா (பெண்), அகாய் (ஆண்) என இரண்டு குழந்தைகள் இருகிறார்கள்.
சமீபத்தில் லண்டனில் கோலி இடத்தை வாங்கியிருந்தார். அடிக்கடி லண்டனுக்கு சென்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி டெஸ்ட்டில் 9,166 ரன்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் 13,906 ரன்களும் குவித்துள்ளார்.
சச்சினுக்குப் பிறகு அதிகளவில் கொண்டாடப்பட்டவர்களில் விராட் கோலியும் ஒருவராக இருக்கிறார். சமீபகாலமாக சரியாக விளையாடாமல் இருக்கும் கோலி பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறார்.
ஏற்கனவே, டி20யில் ஓய்வை அறிவித்த கோலி விரைவில் சர்வதேச போட்டிகளில் ஓய்வை அறிவிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி தோல்வியுற்றால் ஓய்வு பெறலாம் என பலரும் கூறிவரும் நிலையில் லண்டனுக்கு குடியேறுவாரென செய்தி கோலி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.