லவ் ஃபார்முலாவுக்கு திரும்பும் ஷாருக் கான் | Action Film Put on Hold Due to Injury: Shah Rukh Khan Returns to the Romance Genre

Spread the love

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அடுத்த கட்டமாக காதல் படத்திற்கு திரும்ப முடிவு செய்துள்ளார். கடந்த சில ஆண்டுகளில் பல அதிரடி படங்களில் நடித்த பிறகு, இப்போது உடலுக்கு அதிக சிரமம் தராத ஒரு ஒரு காதல் கதாபாத்திரத்தில் நடிக்க ஷாருக்கான் விரும்பம் தெரிவித்துள்ளார்.

தற்போது கிங் படத்தில் நடித்து வரும் ஷாருக்கான், இப்படப்பிடிப்பின் போது காயம் அடைந்தார். இதற்காக அமெரிக்கா சென்று சிகிச்சையும் எடுத்துக்கொண்டார். இதையடுத்து மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் கடினமான உடல் உழைப்பு தேவைப்படும் கதாபாத்திரங்களில் இருந்து விலகி இருக்க ஷாருக்கான் முடிவு செய்து உள்ளார்.

ஏற்கனவே இயக்குனர் பாராகான் மீண்டும் படங்களை இயக்க வந்தால் ஷாருக்கானை வைத்து இயக்குவேன் என்று குறிப்பிட்டு இருந்தார். சமீபத்தில் பாரா கான் இதற்காக ஷாருக்கானை தொடர்பு கொண்டு பேசினார்.

அப்படம் முதிர்ச்சியான காதலை மையமாக கொண்டது என்று கூறப்படுகிறது. அது குறித்து ஜூன் மாதத்திற்குள் முடிவு எடுக்க ஷாருக்கான் முடிவு செய்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தவிர வேறு ஒரு இயக்குனரும் ஷாருக்கானிடம் காதல் கதை ஒன்றை சொல்லி இருக்கிறார். அதில் பழைய பள்ளி, முதிர்ச்சியான காதல், அதிக பட்ஜெட் என கதை வடிவமைக்கப்பட்டு இருந்தது. இது ஷாருக்கானுக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டதாம். ஏற்கனவே டாக்டர்கள் வேறு அதிரடி படங்களில் நடிக்க வேண்டாம் என்று கூறி இருப்பதால் இரண்டு இயக்குனர்களும் கூறி இருக்கும் கதையில் ஒன்றில் நடிக்க ஷாருக்கான் முடிவு செய்துள்ளார்.

பாரா கானின் படம் மற்றும் புதிதாக வந்துள்ள இந்தக் காதல் கதை ஆகிய இரண்டு கதைகள் குறித்தும் ஷாருக்கான் ஆலோசித்து வருகிறார். இது தவிர சில இயக்குனர்களையும் அழைத்து அக்கதைகள் குறித்து பேசி வருகிறார். இரண்டு கதைகளையும் ஆய்வு செய்த பிறகு, ஜூன் மாதத்தில் ஒரு இறுதி முடிவு எடுக்கப்பார் என்று ஷாருக்கானுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. “கிங்’ (King) படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு, அதாவது  அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில் தனது அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை தொடங்க ஷாருக்கான் திட்டமிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *