லாஸ் ஏஞ்சலீஸ் பகுதியில் மீண்டும் பரவிவரும் காட்டூத் தீ காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியை சுற்றியுள்ள 31,000 மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுகாட்டுத் தீ காரணமாக 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 163 சதுர கிலோமீட்டர் பரப்பரளவு காடுகள் தீக்கிரையானது. ரூ.17,29.581 கோடிக்கு(200 பில்லியன்) அதிகமான பொருள்கள் சேதமானது. 12,401 வீடுகள் மற்றும் கட்டடங்கள், பல கட்டுமானங்கள் சேதமடைந்தன. 1.80 லட்சம் பேர் பல்வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், காற்றின் வேகம் குறைந்துள்ளதால் தீ பரவலின் தீவிரம் தணிந்திருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் காட்டுத் தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளது.