லிஃப்டில் ஏன் கண்ணாடி வைக்கிறார்கள்? இதன் பின்னணியில் உள்ள ரகசிய உளவியல்!

Spread the love

லிஃப்ட்களில் பயணம் செய்யும்போது நம்மில் பலரும் கண்ணாடியில் முகத்தைப் பார்த்தபடி செல்வது வழக்கம். ஆனால், கண்ணாடி வைக்கப்பட்டதன் பின்னணியில் உளவியல் தந்திரமும், அறிவியல் காரணங்களும் உள்ளன.

உலகெங்கும் உயரமான கட்டடங்கள் கட்டப்பட்ட தொடக்க காலத்தில் லிஃப்ட்கள் மிக மெதுவாகச் செயல்பட்டன. இதனால் மக்கள் லிஃப்டில் பயணம் செய்யும்போது, நேரம் அதிகம் ஆவதாகவும் சலிப்பாக இருப்பதாகவும் நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இதற்காக லிஃப்டின் மோட்டார்களை மாற்றி வேகத்தை அதிகரிப்பது பல தொழில்நுட்ப சிக்கல்களையும், மிகப்பெரிய பொருட்செலவையும் ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது.

இதைத் தீர்க்க பொறியாளர்கள் ஒரு சுவாரசியமான விஷயத்தைச் செய்தனர். லிஃப்டின் சுவர்களில் கண்ணாடிகளைப் பொருத்தினர். கண்ணாடியில் தங்களைப் பார்ப்பதிலும், ஆடைகளைச் சரிசெய்வதிலும் மக்களின் கவனம் முழுமையாகச் சிதறியதால், பயண நேரம் குறைந்தது போன்ற உணர்வு அவர்களுக்கு ஏற்பட்டது. இயந்திரத்தை மாற்றாமலேயே ஒரு சிறிய உளவியல் தந்திரம் மூலம் மக்களின் புகார்கள் சுலபமாகத் தீர்க்கப்பட்டன.

சிறிய, மூடிய அறைக்குள் இடநெருக்கடி பயம் (Claustrophobia) பலருக்கு உண்டு. கண்ணாடிகள் ஒளியைப் பிரதிபலித்து அந்தச் சிறிய அறையை மிகவும் அகலமாகவும் பெரிதாகவும் காட்டுவதால், மக்களுக்கு ஏற்படும் மனப்பதற்றம் குறைக்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *