லிஜோ மோல் நடிக்கும் ஜென்டில்வுமன்… முதல் பாடல் வெளியீடு!

Dinamani2f2025 02 212fa0rspx562fcapture.png
Spread the love

லிஜோமோல் நடிப்பில் உருவாகியுள்ள ஜென்டில்வுமன் படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் ஜோஸ்வா சேதுராமன் இயக்கத்தில் ஒரே ஆணுடன் உறவிலிருக்கும் இரு பெண்களின் கதையாக ஜென்டில்வுமன் திரைப்படம் உருவாகியுள்ளது.

கோமலாஹரி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் லிஜோமோல், ஹரிகிருஷ்ணன் உடன் லாஸ்லியாவும் நடித்துள்ளார்.

இதையும் படிக்க | கெத்தாகக் கலக்குகிறாரா பிரதீப் ரங்கநாதன்? டிராகன் – திரை விமர்சனம்!

ஜென்டில்வுமன் படத்தின் டீசர் சில நாள்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் முதல் பாடலான ’சுளுந்தீ’ இன்று வெளியிடப்பட்டுள்ளது. யுகபாரதி எழுதியுள்ள இந்தப் பாடலை ரேஷ்மி சதீஷ் பாடியுள்ளார்.

இப்படம் மார்ச் 7 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *